ன்னார்குடி எம்,எல்.ஏ. டி.ஆர்.பி, ராஜாவை அமைச்சராக்கிருப்பதற்கு டெல்டா மாவட்டத்தில் ஒருபுறம் வரவேற்பும், மறுபுறம் புகைச்சலுமாக பரபரப்பாகியுள்ளது.

திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் எம்.எல்.ஏ.வாகவுமுள்ள பூண்டி கலைவாண னுக்கும், மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம்தான். தி.மு.க. ஆட்சி அமைத்ததுமே டெல்டா மாவட்டத்தில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதர வாளர்களும், கலைவாணன்தான் அமைச்சராவார் என இவரது ஆதரவாளர்களும் பேசிவந்தனர். டெல்டா மாவட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென நம்பினர். ஆனால் டெல்டா பகுதியிலிருந்து யாருக்குமே அமைச்சர் பதவி கொடுக்கப் படாததால் கட்சிக்குள் சர்ச்சையானது. இந் நிலையில், "நானே டெல்டாக்காரன்தான்'’ எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியனை அரசு கொறடாவாக அறிவித்தார். அப்போதைக்கு பிரச்சினை ஓய்ந்தாலும், அடுத்தடுத்த அமைச்சரவை மாற்றங்களில் எதிர்பார்ப்பு தொடர்ந்தது.

tt

Advertisment

இச்சூழலில் இரண்டாமாண்டு ஆட்சி நிறைவுக்குப்பின் இளைய தலைமுறையைச் சேர்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. டி.ஆர்.பி.ராஜா தொழிற்துறை அமைச்சரானதும் மன்னார்குடி தொகுதி மட்டுமன்றி திருவாரூர் மாவட்ட மக்களே பெருமகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில், பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்களோ, 'திருவாரூர் மாவட்டத்தை தி.மு.க. கோட்டை யாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக் கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்களது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை, எங்கள் கலைவாணனுக்காக மட்டுமே கழகத்தில் நாங்கள் இருக்கிறோம்' என்ற வாசகத்துடன் போஸ்டர் களை ஒட்டி பரபரப்பாக்கியுள்ளனர். அதோடு, பூண்டி கலைவாணனின் மகனும், மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் கலைச்செல்வனின் மகனும் முகநூலில் கடுமையாக விமர்சித்துப் பதிவெழுதினர். கலைவாணனின் எதிர்ப்பு குறித்து டி.ஆர்.பாலுவிடம் கேள்வியெழுப்பியபோது, "அவர் எங்களது நண்பர், எங்களுடைய மாவட்ட செயலாளர். ராஜா அமைச்சராக அவர்தான் மிகமுக்கிய காரணம்'' என நாசூக்காக பதிலளித்தார்.

கலைவாணன் ஓரங்கட்டப்பட்டது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில், "இதுல ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. பூண்டி கலைவாணனின் அண்ணன் கலைச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தை அரவணைக்கும்விதமாக கலைஞரால் மாவட்டச் செயலாளராக் கப்பட்டார் கலைவாணன். இதற்கு டி,ஆர்,பாலு, கே.என்.நேரு உள் ளிட்டவர்களும் காரணமாக இருந்த னர். அதுவரை கட்சியில் வார்டு உறுப் பினராகக் கூட கலைவாணன் இல்லை. ஒப்பந்ததாரராக மட்டுமே இருந்து வந்தார். அந்த சமயத்தில் தலையமங்க லம் பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்ட சீனியர்களை ஓரங்கட்டித்தான் மாவட்ட செயலாள ரானார். பிறகு அ.தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது, அதை எதிர்த்து எவ்வித ஆர்ப் பாட்டமோ, போராட்டமோ கலை வாணன் நடத்தியதில்லை. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஆர்.காம ராஜுடன் நெருக்கம் வைத்துக் கொண்டு பல கோடிகள் புழங்கும் ஒப்பந்தப் பணிகளை செய்துவந்தார். இதுகுறித்தெல்லாம் கலைவாணன்மீது தலைமைக்கு புகார்கள் சென்றது'' என்கிறார்கள்.

Advertisment

tt

உளவுத்துறை தரப்பில் கேட்ட போது, "தி.மு.க. பலமாக இருந்த நன்னிலத்தை அ.தி. மு.க. காமராஜுக்காக விட்டுக்கொடுத்ததிலிருந்து, குடவாசல் ராஜேந்திரன். கருப்பு முருகானந்தம் ஆகி யோரிடம் நெருக்கம் காட்டுவதுவரை கலை வாணன் மீது தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியையே பலமுறை அப்செட்டாக்கியுள்ளார். கலைவாணனின் வாரிசு களின் சேட்டையும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் மா.செ. பதவியே பறிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கலைவாணனால் தான் கட்சி என்றெல்லாம் போஸ்டர் அடித்த தையும் தலைமை கவனிக்கத் தவறவில்லை'' என்கிறார்கள்.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் கூறுகையில், "ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரதிநிதியாக டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராக்கியிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கிடையே டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மையை செய்து வருகின்ற னர். விவசாயிகளின் வேளாண்மையைக் காக்கும் வகையிலும், டெல்டா மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையிலும், இயற்கை வேளாண்மை விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை செய்யவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது''’என்றார்.

tt

தமிழக உழவர் இயக்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறுகையில், "டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லை என்கிற கவலையை போக்கியதோடு தொழிற்துறை அமைச்சராக்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி'' என்றார்.

மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர்களோ, "மன்னார்குடி மிகவும் பாரம்பரியமிக்க ஊர். கடந்த காலத்தில் சசிகலா, திவாகரன், முன்னாள் அமைச்சர் காமராஜ் எனப் பெரும் ஆளுமைகள் இருந்து மன்னார்குடியை வளர்த்தெடுக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. ஆனால், மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வான ராஜாவோ, புதிய பேருந்து நிலையம், பாதாளச் சாக்கடைத் திட்டம், குளங்கள் தூர்வாருதல் என அசத்திவருகிறார். தற்போது அமைச்சரானதால் மன்னார்குடி நிச்சயம் மிளிரும்''’ என்கிறார்கள்.